இல்லம்தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி


இல்லம்தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு  பயிற்சி
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் வட்டார அளவிலான இல்லம்தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் வட்டார அளவிலான இல்லம்தேடி கல்வி மையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கான இ-சேவை மைய பயிற்சி நடந்தது. இதில் இ-சேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 42 ஊராட்சிகளை சேர்ந்த 49 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி தலைமையில் நடந்த இந்த பயிற்சியில், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானப்புகழேந்தி கலந்து கொண்டு பேசுகையில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கிட்டத்தட்ட 3 ஆண்டு கால தன்னார்வலர்களாக பணியாற்றிய அனுபவ முதிர்ச்சியும், அற்பணிப்பு உணர்வுடனும் மக்களுடன் பணியாற்றி வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்திலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தன்னார்வலர்களுக்கு இ-சேவை மையம் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அரசு இதனை தொடங்குவதற்கான கடன் வசதியையும் அமைத்து தர திட்டமிட்டு உள்ளது. எனவே விருப்பம் தெரிவித்துள்ள தன்னார்வலர்கள் முறையாக பதிவு செய்து இ-சேவை மையத்தை தொடங்கி சேவை புரிய வேண்டும் என்றார்.. பயிற்சி முடிவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார்.


Next Story