உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு பயிற்சி


உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கு பயிற்சி நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட வட்டார அணி தலைவர் சித்திரவேலு முன்னிலை வகித்தார். அனைவரையும் திட்ட செயலாக்குனர் திவ்யா வரவேற்றார். இதில் கலந்து கொண்ட உற்பத்தியாளர் குழு தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்றுநர்கள் காயத்ரி, ஆரோக்கிய அனிட்டாபிரியா ஆகியோர் உற்பத்தியாளர் குழு திறன் மேம்பாடு, குழு நிர்வாகிகள் செயல்படுத்த வேண்டிய பணிகள் கால்நடை பராமரிப்பு குழு மேம்பாடு குழுவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுதல் போன்ற பயிற்சிகளை அளித்தனர். இதில் திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story