புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி
x

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1,204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 8 பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 144 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்புப்பணிகள், விபத்துக்களில் இருந்து மீட்டல், நீச்சல் பயிற்சி, மலையேற்றம் பயிற்சி, யோகா மற்றும் பல்வேறு வகையான பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்.


Next Story