மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி

வால்பாறையில் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொழில்நுட்ப பயிற்சி
வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 8 மையங்களில் 237 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியில், மாணவர்கள் குறித்த விவரங்களை பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கப்பட்டது.
வால்பாறை அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை தலைமை ஆசிரியர் ராபின்சன் தொடங்கி வைத்தனர்.
இணையதளத்தில் பதிவேற்றம்
இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களின் விவரங்கள், அவர்களின் தனித்திறமைகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், கல்வி கற்பிக்கும் முறை, அன்றாட பள்ளி நிகழ்வுகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வால்பாறை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.






