பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச்சான்று வழங்குவது குறித்து பயிற்சி


பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச்சான்று வழங்குவது குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச்சான்று வழங்குவது குறித்து பயிற்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கு இணையவழியில் சாதிச்சான்று வழங்குதல் தொடர்பாக சப்- கலெக்டர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். பயிற்சி வகுப்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சுரேஷ் மற்றும் திருப்பூர், நீலகிரி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி வகுப்பில் கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:-

பழங்குடியின மக்கள் கடந்த காலங்களில் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த இடங்களில் வாழ்வார்கள், அவர்களின் கலாசாரம், மொழி பற்றி அறிந்துகொள்வதும் பழங்குடியின சாதிசான்றிதழ் வழங்குவதும் எளிதாக இருந்தது. ஆனால், தற்போதைய காலத்தில் அவர்களின் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து நகரங்களில் வாழ்கின்றனர். நவீன கல்வி பயின்ற பழங்குடியின மக்களின் பேசும் மொழி கலாசாரம் மாறி உள்ளது. பழங்குடியின மக்களின் பூர்வீகம் வனம் அல்லது மலைப்பகுதிகளாக இருந்தாலும், குழந்தைகளின் படிப்பு, வேலை விஷயமாக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மேலும், பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்போது சரியானவர்களுக்கு உரிய காலத்தில் விரைவாக வழங்க வேண்டும். தேவையில்லாமல் காலதாமதம் செய்யக்கூடாது.பழங்குடியினர் சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்த்தல் தொடர்பாக கண்காணிப்பு விசாரணையை விரைவுபடுத்தி, சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story