வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்
x

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

வேலூர்

காட்பாடி

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தார். தேர்தல் துணை தாசில்தார் ஜெயந்தி வரவேற்றார்.

இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செல்போன் செயலியான கருடாவை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story