காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி


காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி
x

காவேரிப்பாக்கத்தில் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட சமையலர்களுக்கு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சையுப்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்தார்.

தமிழகம் முழுவதும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளுக்கு முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தால் 1545 பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் பயனடைவர். இதற்காக நியமிக்கப்பட்ட சமையலருக்கு ரவா பொங்கல், கோதுமை ரவா கிச்சடி, அரிசி உப்புமா உள்ளிட்ட 14 வகையான காலை உணவுகளை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story