ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி


ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு பயிற்சி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் பணிபுரியும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. பயிற்சி பள்ளி ஐ.ஜி. மகேஸ்வர்தயள் உத்தரவின் பேரில் கமாண்டோ ராஜேஸ்குமார், துணை கமாண்டோ அனஸ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோஷ், பிரபு மற்றும் 9 பயிற்சியாளர் இணைந்து 70 வீரர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை அணை பகுதியில் அளித்தனர். நிலநடுக்கம், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது, டிரம்ப் கேன் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு உருவாக்கப்பட்ட படகில் அணையின் மைய பகுதிக்கு சென்று அங்கு நீரின் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது உள்பட பல்வேறு பயிற்சிகளை தத்ரூபமாக அளித்தனர்.


Next Story