விருத்தாசலத்தில் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


விருத்தாசலத்தில் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:47 PM GMT)

விருத்தாசலத்தில் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு இயக்குநகரம் மற்றும் தேசிய தேனீ வளர்ப்பு வாரியத்தின் நிதி உதவியுடன் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது.

இதற்கு பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் சாந்தி தலைமை தாங்கி, பயிற்சி கையேடு மற்றும் தேனீ வளர்ப்பு இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். பூச்சியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயராஜன் நெல்சன், பயிர் நோயியல் துறையின் பேராசிரியர், தலைவர் கார்த்திகேயன், முனைவர் சாமிநாதன், மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் பாஸ்கரன், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தொழில்நுட்ப வல்லுநர் செங்குட்டுவன், பேராசிரியர் காயத்ரி, தேனீக்களின் ஆர்வலர் சுதந்திர செல்வன் ஆகியோர் தேனீக்களின் முக்கியத்துவம், தேனீக்களால் வரும் நன்மைகள், தேனீக்களின் வகை என்ன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story