பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் வேளாண் பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் பாரம்பரிய முறையில் பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கானபயிற்சி பழைய சிறுவாங்கூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கி பாரம்பரிய முறையில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை எவ்வாறு சாகுபடி செய்ய வேண்டும். அதன் பயன்கள் என்ன என்பது பற்றி விவசாயிகளிடம் விளக்கி கூறினார். பின்னர் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க மீன் அமிலம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந்த பயிற்சியை வேளாண்மை உதவி அலுவலர் வினோத் குமார் ஒருங்கிணைத்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சுகனேஷ்வரன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தார். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.


Next Story