ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர்

கரூர் வட்டாரம், வாங்கல், சோமூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, பல்வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை வழங்கினார். வேளாண்மை அலுவலர் ரேணுகாதேவி முன்னிலை வகித்து, வேளாண் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்து கூறினார். மேலும் இப்பயிற்சியில் ஆடு, மாடு, கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணையம் செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story