சித்தப்பட்டிணத்தில்கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


சித்தப்பட்டிணத்தில்கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:45 PM GMT)

சித்தப்பட்டிணத்தில் கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் அட்மா திட்டத்தின் கீழ் சித்தப்பட்டிணம் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு உதவி வேளாண்மை இயக்குனர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பன் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் புஷ்பவள்ளி நுண்நீர் பாசனம், நுண்ணுட்ட உரங்கள் மற்றும் மண் பரிசோதனை செய்வது குறித்தும், துணை வேளாண்மை அலுவலர் சிவனேசன் உழவன் செயலி பயன்பாடு குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரி ஆனந்தி அட்மா திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்கள். தொடர்ந்து பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் ராஜா மற்றும் கரும்பு மேலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கரும்பு ஒரு பறு கருனை விதை நாற்றங்கால் தயாரிக்கும் முறை, நடவு முறை, சொட்டு நீர் பாசன முறை, கரும்பு சாகுபடி செலவு குறைவது மட்டுமல்லாமல் அதிகமாக மகசூல் பெறுவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். கரும்பு பார் அமைக்கும் முறைகள் குறித்து கரும்பு ஆய்வாளர்கள் சக்திவேல் மற்றும் விஜயமணி ஆகியோர் கூறினா். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார்.


Next Story