கிணத்துக்கடவு அருகே பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கிணத்துக்கடவு அருகே பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு வட்டாரத்தில் சிறுகளந்தை கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை வேளாண்மை அலுவலர் நந்தினி தலைமை தாங்கி அங்கக வேளாண்மை பற்றியும் அதனை எவ்வாறு பின்பற்றுவது குறித்தும் விளக்கமாக பேசினார். கிணத்துக்கடவு வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தகுமார் அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதால் என்ன பயன்கள் என்பது குறித்து பேசினார். வேளாண்மை துணை அலுவலர் மோகனசுந்தரம் தொகுப்பு விவசாயிகளுக்கு எவ்வாறு அங்கக வேளாண்மை கடைபிடிக்க வேண்டும் மற்றும் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ள சம்பத்குமார் தனது தோட்டத்தில் செயல்படுத்தப்படும் அங்கக வேளாண்மை குறித்தும், பயன்படுத்தும், இயற்கை உரங்கள் மற்றும் அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள் குறித்தும் அதனை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்து கூறினார். இதில் மண் பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் அருண், மண் பரிசோதனை செய்தல் குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார். பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.