மண்புழுஉரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


மண்புழுஉரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

விக்கிரவாண்டி அருகே மண்புழுஉரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே எண்ணாயிரம் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துணை இயக்குனர் பெரியசாமி தலைமை தாங்கினார். அட்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் சண்முகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்றார். திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் கோமதி, லீலாவதி ஆகியோர் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் வேளாண்மை அலுவலர்கள் திவ்யபிரியா, பூங்காவனம், உதவி தொழில் நுட்ப மேலாளர் விக்னேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story