நாற்றங்கால் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி


நாற்றங்கால் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 11 Jun 2023 3:30 AM IST (Updated: 11 Jun 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலைத்துறை சார்பில் நாற்றங்கால் அமைக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உள் மாநில அளவிலான காய்கறி பயிர்களில் உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் அமைப்பது குறித்த பயிற்சி திண்டுக்கல் காய்கறிகளின் மகத்துவ மையம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. குளித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்தல், நிழல் வலை கூடாரத்தில் நாற்றங்கால் அமைத்தல், நாற்றங்காலில் பயன்படுத்தபடும் அங்கக இடுபொருட்கள் குறித்து வகுப்புகள் எடுத்து பயிற்சி அளிக்கப்பட்டதுடன், செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பான சூழலில் காய்கறி சாகுபடி, நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் மற்றும் உரங்களை வழங்குதல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Next Story