அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
சுல்தான்பேட்டை
தமிழக கல்வித்துறையானது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது கல்விமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது.
இதில் ஜாலி பொனிக்ஸ் திட்டம் முக்கியமானதாகும். அதன்படி சுல்தான்பேட்டை ஒன்றியம் அக்கநாயக்கன்பாளையத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துக்களை எளிதில் எழுத்து கூட்டி வாசிப்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் தொடங்கி வைத்தார். இதில் எஸ்.எஸ்.ஏ. திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்குமார் வரவேற்றார். கருத்தாளர் ரீத்துவர்மா ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முகமது ரபி நன்றி கூறினார்.