அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 18 Jun 2023 12:30 AM IST (Updated: 18 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்


கோவை

அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரோக்கியம், உடல் நலம் மற்றும் பள்ளியின் மன்ற செயல்பாடுகள் குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.

கோவை குறுமைய அளவிலான இந்த பயிற்சியானது சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி அரசு மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ். புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜவீதி துணிவணிகர் சங்க மேல்நிலைப்பள்ளி, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 குறுவள மையங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சிகளில் 534 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story