மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக் கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார்.
ஆசிரியர் பயிற்றுனர் சுகன்யா உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பேசினார்.
அப்போது உறுப்பினர்களின் கடமை, பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளி முன்னேற்றத்திற்கு திட்டமிடுதல், போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மனுவேல்ராஜன் நன்றி கூறினார்.
Next Story