பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி
சின்னசேலத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
சின்னசேலம்,
சின்னசேலத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக பயிற்சி நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ராகேஷ் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் ரமேஷ் வரவேற்றார். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமரன் கலந்து கொண்டு் சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். பணியின் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும்குறைகளை அவ்வப்போது அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக சின்னசேலத்தை தூய்மையான பேரூராட்சியாக மாற்ற துப்புரவு பணியாளர்கள் தீவிர பணியாற்ற வேண்டும் என்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாரங்கன், காந்தி, அரசு, பிரபு, சரவணன், உமா ஜெயவேல், பத்மாவதிசிவக்குமார், பேபிகுமார், சிவசக்திரவி, வீராசாமி மற்றும் மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், பேரூராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.