பயங்கரவாதம் தடுப்பு குறித்து போலீசாருக்கு பயிற்சி
கோவையில் பயங்கரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
கோவை
கோவையில் பயங்கரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
போலீசாருக்கு பயிற்சி
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப் பேற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் போலீசாரின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் விளை யாட்டு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் பணியாற்றி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயங்கர வாதம் தடுப்பு தொடர்பான பயிற்சி நேற்று நடந்தது. இதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.
கண்காணிக்க வேண்டும்
அப்போது அவர் பேசியதாவது:- பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பாக அரசு பல்வேறு நெறி முறைகளை வகுத்து உள்ளது. அவற்றை நீங்கள் முறையாக பின்பற்ற வேண்டும். கோவையில் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க போலீசார் முறையாக ரோந்து செல்ல வேண்டும்.
குறிப்பாக தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள இடத்தில் எந்த இடமும் விட்டுப்போகாமல் அனைத்து பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். போலீசார் தொடர் கண்காணிப்பில் இருந்தால் பயங்கரவாத செயல்கள் நடைபெற வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.