பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி


பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 Aug 2023 2:15 AM IST (Updated: 15 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

பயிற்சி வகுப்பு

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் பள்ளி மேலாண்மை குழு குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தெற்கு வட்டார கல்வி அலுவலர் பூம்பாவை முன்னிலை வகித்தார். இதை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) காயத்ரி வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் ரம்யா, சுபிதா ஆகியோர் பயிற்சி அளித்து பேசினார்கள். இதில் நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சத்தான உணவுகள்

பள்ளி மேலாண்மை பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், சுயஉதவிக்குழுவினர் உறுப்பினர்களாக உள்ளனர். 6 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மதிய உணவு திட்டம் முறையாக செயல்படுவதை கண்காணித்து, சுவையான மற்றும் சத்தான உணவுகள் குழந்தைகளுக்கு கிடைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பயிற்சியில், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும், அதை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுவின் பங்கு குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story