திருச்செங்கோட்டில் கிராம வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி


திருச்செங்கோட்டில் கிராம வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வட்டாரம் மொளசி கிராமத்தில் கிராம வேளாண்மை முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் லோகநாதன் தலைமை தாங்கி, சிறுதானிய பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் பற்றி கூறினார். துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சொட்டு நீர் பாசன மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி தென்னை மற்றும் கரும்பு சாகுபடியில் பூச்சி நோயை கட்டுப்படுத்துவது குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் உழவன் செயலி பயன்பாடு குறித்தும் பேசினர். இந்த பயிற்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ராஜமாணிக்கம், துணைத் தலைவர் சந்திரசேகர், செல்லியம்மன் கோவில் தர்மகர்த்தா பிச்சமுத்து மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story