விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி


விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி
x

நாமக்கல்லில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடி குறித்து பயிற்சி வருகிற 20 -ந் தேதி நடக்கிறது.

நாமக்கல்

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணியளவில் "நெல் மற்றும் மக்காச்சோள சாகுபடி குறிப்புகள்" என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம், மண் மற்றும் நீர் மாதிரி சேகரித்தல், ரகங்கள், இடைவெளி மற்றும் நாற்றங்கால் பராமரிப்பு, விதை நேர்த்தி செய்தல், ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, நீர் மற்றும் களை மேலாண்மை குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும். எனவே விவசாயிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் அடையலாம். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் 04286266345 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story