பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி
நெல்லை மாநகராட்சி பணியாளர்களுக்கு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில், மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம்-2013 குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆணைப்படி, மகளிர் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான முறையீடுகள் குறித்து ஆய்வு செய்து கமிஷனருக்கு அறிக்கை அளித்திடும் வகையில் 8 பேர் உறுப்பினர் கொண்ட குழு பற்றிய தகவல் பலகையினை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் வெளியிட்டனர். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை மேயர் தலைமையில் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story