தொல்லியல் மாணவர்களுக்கு பயிற்சி
தொல்லியல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டயம் ஆகிய பட்டயங்களில் பயின்று வரும் மாணவர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். மேலும் மாவட்டத்திலுள்ள வரலாற்று சின்னங்கள் உள்ள இடத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அலுவலர்கள் சிவானந்தம், துணை இயக்குனர் பாக்கியலட்சுமி, தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை, அகழாய்வு இயக்குனர் சாய்பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்து எடுத்துரைத்தனர்.
Related Tags :
Next Story