காய்கறி, பழங்களை சந்தைப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்


காய்கறி, பழங்களை சந்தைப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
x

மன்னார்குடி அருகே காய்கறி, பழங்களை சந்தைப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி அருகே காய்கறி, பழங்களை சந்தைப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உழவர் சந்தையின் வரத்து மற்றும் செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும் விதமாக இடையர்நத்தம் கிராமத்தில் விவசாயிகள் நுகர்வோர்கள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் மன்னார்குடி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா கலந்துகொண்டு கீழநத்தம், இடையர்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் வயல்களை பார்வையிட்டார்.

இதையொட்டி விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்தும் முறை, உழவர் அட்டை எவ்வாறு வாங்குவது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காய்கறி நாற்றுகள்

இதில் தோட்டக்கலைத் துறை அலுவலர் முத்து சுந்தரம், உதவி தோட்டக்கலை அலுவலர் அன்பரசன் ஆகியோர் விவசாயிகள் எவ்வாறு பயிர் ரகங்களை தேர்வு செய்வது, கத்தரி, வெண்டை, பாகல், கீரை ஆகிய காய்கறி வகைகளுக்கு பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

உதவி வேளாண் அலுவலர்கள் வசந்தகலா, கனகராஜ், மோகனா ஆகியோர், ஒவ்வொரு விவசாயிக்கும் உழவர் அட்டை வழங்கப்படும் என்றும், அதனை பயன்படுத்தி இலவசமாக காய்கறிகளை உழவர் சந்தைக்கு எடுத்து வரலாம் எனவும், உழவன் அட்டை வாங்குவதற்கு தேவையான விண்ணப்பத்தை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர் அன்பரசன், அபிலாஷ் ஆகியோர் மூவாநல்லூரில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் அரசு மானிய திட்டத்தின் கீழ் எவ்வாறு காய்கறி நாற்றுகளை பெறுவது என்பது குறித்து விளக்கி கூறினர்.


Next Story