புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி


வால்பாறை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி வேட்டையாடும் பயிற்சிக்காக திறந்தவெளி கூண்டுக்குள் விடப்பட்டது

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட புலிக்குட்டி வேட்டையாடும் பயிற்சிக்காக திறந்தவெளி கூண்டுக்குள் விடப்பட்டது.

புலிக்குட்டி மீட்பு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை அருகே முடீஸ் பஜார் குடியிருப்பு அருகே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வனத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு புலிக்குட்டி உடல் முழுவதும் காயத்துடன் உடல்நலிந்த நிலையில் நடந்து சென்றது.

இது குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் புலிக்குட்டியை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அந்த புலிக்குட்டி அய்யர்பாடியில் உள்ள மனித- வன விலங்கு மோதல் தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட் டது.

அப்போது தான் அது 8 மாதமே ஆன புலிக்குட்டி என்ப தும், முள்ளம்பன்றியை வேட்டையாடும் போது, உடல் முழுவ தும் முட்கள் குத்தி காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது.

பிரத்யேக கூண்டு

இதை தொடர்ந்து அந்த புலிக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டது. அதன் உடல்நிலை தேறியதை தொடர்ந்து கூண்டில் அடைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.

தாயிடம் இருந்து பிரிந்த அந்த புலிக்குட்டியை வனப்பகுதிக்குள் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வேட்டையாட தெரியவில்லை.

எனவே அதற்கு வேட்டை பயிற்சி அளித்து வனப்பகுதிக்குள் விட முடிவு செய்தனர்.

இதற்காக மானாம்பள்ளி வனச்சரகத் துக்கு உட்பட்ட பரம்பிக்குளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியை யொட்டி உள்ள மந்திரமட்டம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் இந்த புலிக்குட்டிக்கு வேட்டை பயிற்சி அளிக்க ரூ.75 லட்சத்தில் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திறந்தவெளி சிறப்பு கூண்டு அமைக்கப்பட்டது.

கூண்டுக்குள் விடப்பட்டது

தற்போது அந்த புலிக்குட்டி காயத்தில் இருந்து குணமடைந்த தால் அதை திறந்தவெளி கூண்டில் விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதற்காக சிறிய இரும்புக்கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த புலிக்குட்டியை வாகனத்தில் ஏற்றி கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப் ரமணியம் தலைமையிலும் துணை கள இயக்குனர் கணேசன் முன்னிலையிலும் அந்த புலிக்குட்டி பிரத்யேகமான திறந்தவெளி கூண்டுக்குள் விடப்பட்டது.

அதற்குள் சென்றதும், அந்த புலிக்குட்டி உறுமியபடி அங்குமிங் கும் ஓடியது. அது சாப்பிடுவதற்காக 5 கிலோ இறைச்சி துண்டுகள் வைக்கப்பட்டன. புலிக்குட்டி எளிதாக வேட்டை யாடும் வகையில் முயல் கூண்டுக்குள் விடப்பட்டது.

ஆனால் அது முயலை வேட்டையாடாமல் அங்குமிங்கும் கூண்டுக்குள் ஓடியவாறு இருந்தது.

இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

வேட்டை பயிற்சி

தமிழகத்திலேயே முதன் முறையாக 18 மாத புலிக்குட்டியை திறந்தவெளி கூண்டுக்குள் விட்டு வேட்டை பயிற்சி அளிக்கப்படு கிறது. அது எளிதாக வேட்டையாடும் வகையில் முதலில் முயல் விடப்படும்.

அதை வேட்டையாடிய பிறகு காட்டுப்பன்றி விடப்படும். அதைத்தொடர்ந்து படிப்படியாக சிறு சிறு விலங்கு களை விட்டு புலிக்குட்டி வேட்டை பயிற்சி அளிக்கப்படும்.

நன்றாக வேட்டையாட பயிற்சி பெற்ற பின்னர் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று புலிக்குட்டி மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்படும். தற்போது 18 மாதமான அந்த ஆண் புலிக்குட்டி 140 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. திறந்தவெளி கூண்டு இருக்கும் இடம் அடர்ந்த வனப்பகுதி ஆகும்.

எனவே அதை கூண்டை சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story