மாடி தோட்டம் அமைக்க பெண்களுக்கு பயிற்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்
ஆனைமலை
தோட்டக்கலைத்துறை சார்பில், வீட்டு காய்கறி மற்றும் மாடி காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம் ஆனைமலை வட்டாரத்திற்கு உட்பட்ட சோமந்துறை ஊராட்சியில் நடைபெற்றது. வீடு, மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் என்னென்ன காய்கறிகள் சாகுபடி செய்யலாம் என்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜமுனா தேவி கலந்து கொண்டு காய்கறி தோட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வீட்டு காய்கறி தோட்ட விதைகள் மற்றும் தானியங்களை ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story