விவசாய மகளிர் குழுவினருக்கு பயிற்சி பட்டறை


விவசாய மகளிர் குழுவினருக்கு பயிற்சி பட்டறை
x

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விவசாய மகளிர் குழுவினருக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் விவசாய மகளிர் குழுவினருக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

விவசாய மகளிர் குழுவினருக்கு பயிற்சி பட்டறை நடந்தது.

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் விவசாய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை பரப்புதல் குறித்த பயிற்சி பட்டறை 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் 70-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி பட்டறையில் நாட்டின் நிலையான வளர்ச்சிக்கான 17 இலக்குகள், விவசாயத்தின் தொழில்நுட்ப பயன்பாடு விதை தேர்ந்தெடுப்பு, உயிரி உரங்கள், சூரிய ஆற்றல், கால்நடை பராமரிப்பு குறித்த தலைப்புகளில் கருத்துகள் வழங்கப்பட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கினர். நிறைவு நாளான நேற்று பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட விவசாய மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி சான்றிதழ் வழங்கி பேசினார். வேதியியல் துறைத் தலைவர் அருண் வரவேற்றார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார். இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story