சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து


சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து
x

பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்

ஒடிசா மாநிலம் ரூர்கேலா யார்டு பகுதியில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் கோவை- பரவுனி சிறப்பு ரெயில் (03358) இன்று (புதன்கிழமை), வருகிற 11-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் பரவுனி- கோவை சிறப்பு ரெயில் (03357) வருகிற 7-ந் தேதி மற்றும் 14-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story