அரக்கோணத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் சென்றன


அரக்கோணத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் சென்றன
x

ஆவடியில் ரெயில் தடம் புரண்டதால் அரக்கோணத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

ராணிப்பேட்டை

சென்னை சென்டிரல் - அரக்கோணம் ரெயில் மார்கத்தில் உள்ள ஆவடி ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 5.40 மணிக்கு அண்ணனூர் பணிமனையில் இருந்து வந்த புறநகர் ரெயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து மைசூர் மற்றும் விஜயவாடா செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சென்னை- கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூரூ டபுள் ெடக்கர் எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூரூ பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ், சென்னை- அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் வரை செல்லும் 5 புறநகர் ரெயில்களும் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டன.

மேலும் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் புறநகர் ரெயில்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக அரக்கோணத்தில் இருந்தது சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story