குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணி
x
திருப்பூர்


தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது. பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாதுகாப்பான ஆரோக்கியமான தலைமுறையை உருவோக்குவோம் என்பதை வலியுறுத்தி கையெழுத்து பிரசார இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் நிலைமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். குழந்தைகளின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி மற்றும் கன்னியமான வாழ்க்கைக்கான உரிமையை பாதுகாக்கவும் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் குழந்தை பாதுகாப்புக்கு எதிரான செயல்களை அகற்றி அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) செந்தில்குமரன், குழந்தை பாதுகாப்பு அதிகாரி ரியாஸ், தொழிற்சாலை துறை அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story