சென்னிமலை சார்பதிவாளர் அலுவலக, பெண் உதவியாளர் பணியிட மாற்றம்


சென்னிமலை சார்பதிவாளர் அலுவலக, பெண் உதவியாளர் பணியிட மாற்றம்
x

சென்னிமலை சார்பதிவாளர் அலுவலக பெண் உதவியாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை சார்பதிவாளர் அலுவலக பெண் உதவியாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

பதிவு செய்ய மறுப்பு

கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகம் (வயது 64) என்பவருக்கு சொந்தமான நிலம் சென்னிமலை அருகே உள்ளது. இந்த நிலத்தை சென்னிமலை பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் காலை சண்முகம் சென்னிமலையில் உள்ள சார்பதிவாளரை சந்தித்து தனது நிலத்திற்கு உண்டான அசல் ஆவணங்களை காண்பித்து நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு உறுதி செய்தார். இதற்காக அன்று மாலை 3 மணியளவில் பத்திரப்பதிவு செய்வதற்காக டோக்கன் பெற்றிருந்தார். ஆனால் டோக்கன் பெற்றிருந்த நேரம் கடந்தும் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து சண்முகம் சார்பதிவாளரிடம் கேட்டதற்கு, உங்கள் நிலத்தை விற்பதற்கு தடங்கல் கடிதம் வந்துள்ளதால் விற்பனை செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.

பத்திரப்பதிவு செய்ய காலையில் எந்த தடங்கலும் இல்லாத போது மாலையில் எப்படி தடங்கல் வரும் என்றும், பத்திரப்பதிவு செய்ய மறுப்பதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றும் நிலத்தை விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மாலை 6 மணி அளவில் பணி நேரம் முடிந்து சார்பதிவாளர் சென்று விட்டார். இதனால் அன்று இரவு சுமார் 25-க்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

பணியிட மாற்றம்

அப்போது அலுவலக உதவியாளர் வனிதகுமாரி என்பவர்தான் இந்த பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கோரி சார்பதிவாளரிடம் தெரிவித்ததாக கூறி வனிதகுமாரிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த நிலையில், கோவை மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சுவாமிநாதன் உத்தரவின் பேரில் வனிதகுமாரியை ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த கல்பனா என்பவர் சென்னிமலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Next Story