மோகனூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை மாற்றம்
மோகனூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மோகனூர்:
மோகனூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சி செயலாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக நலன்
மோகனூர் ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள் உள்ளன. இதில் 10 ஊராட்சிகளில் பணியாற்றிய ஊராட்சி செயலாளர்கள் நிர்வாக நலன்கருதி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தேன்மொழி பிறப்பித்துள்ளார்.
அதன்படி அணியாபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய கோமதி லத்துவாடி ஊராட்சிக்கும், சின்னப்பெத்தம்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றிய மீனாம்பாள் தோளூர் ஊராட்சிக்கும், கே.புதுப்பாளைம் ஊராட்சி செயலாளர் சித்ரா மாடகாசம்பட்டிக்கும் மற்றும் கே.புதுப்பாளையத்துக்கு கூடுதல் பொறுப்பாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எஸ்.வாழவந்தி ஊராட்சி
மேலும் கொமாரபாளையம் ஊராட்சி செயலாளர் மாதவி ஓலப்பாளையம் ஊராட்சிக்கும், ஓலப்பாளையத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி கொமாரபாளையம், ஊராட்சிக்கும், லத்துவாடி ஊராட்சி செயலாளர் செல்வராஜ் மணப்பள்ளி ஊராட்சிக்கும், பெரமாண்டம்பாளையம் ஊராட்சி செயலாளர் வேல்குமார், அணியாபுரத்திற்கும், மணப்பள்ளி ஊராட்சி செயலாளர் ரமேஷ் எஸ்.வாழவந்தி ஊராட்சிக்கும், எஸ்.வாழவந்தி ஊராட்சி செயலாளர் கோகுல கண்ணன் பெரமாண்டபாளையம் ஊராட்சிக்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பரளி ஊராட்சி செயலாளர் விஜயகுமார் சின்னபெத்தம்பட்டி ஊராட்சி கூடுதல் பொறுப்பாகவும் பணியிடை மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.