லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கிய விவகாரம்: பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் இடமாற்றம்
லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.2 லட்சம் சிக்கிய விவகாரம்: பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் இடமாற்றம்
ஈரோடு
அந்தியூர்
பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வாளராக சுகந்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அவரது அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. இதையடுத்து துறைவாரி நடவடிக்கையாக மோட்டார் வாகன ஆய்வாளர் சுகந்தி மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story