நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு


நாமக்கல்  மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

தாசில்தார்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்றி வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார். அதன்படி நாமக்கல் தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ், இடமாறுதல் செய்யப்பட்டு, ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன் இடமாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திருச்செங்கோடு உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கம், குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சின்னதம்பி, நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனி தாசில்தார்கள்

நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி இடமாறுதல் செய்யப்பட்டு, நாமக்கல் அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மாதேஸ்வரி, நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பச்சைமுத்து இடமாறுதல் செய்யப்பட்டு, திருச்செங்கோடு தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த அப்பன்ராஜ் சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பொறுப்பை மணிகண்டன் கூடுதலாக கவனிப்பார் என்றும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார்.

1 More update

Next Story