காஞ்சீபுரத்தில் 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம் - கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 16 தாசில்தார்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
சமூகப்பாதுகாப்பு தாசில்தார் பணியிடமாற்றம்
குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், காஞ்சீபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், ஸ்ரீபெரும்புதூர் விரிவாக்க திட்ட நிலம் எடுப்பு தாசில்தார் நாராயணன், குன்றத்தூர் தாசில்தாராகவும், சென்னை - பெங்களூரு விரைவு சாலை அலகு 1 தாசில்தார் கருணாகரன், ஸ்ரீபெரும்புதூர் விரிவாக்க திட்ட நிலம் எடுப்பு தாசில்தாராகவும், உத்திரமேரூர் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தகுமாரி சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்ட அலகு 1 தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாணிபக்கிடங்கு மேலாளா் இடமாற்றம்
குன்றத்தூர் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் வனிதா, நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக சென்னை விமானநிலைய விரிவாக்க திட்ட தாசில்தாராகவும், நிலம் எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக சென்னை விமானநிலைய விரிவாக்க திட்ட தாசில்தார் கோட்டீஸ்வரன் ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும், தமிழ்நாடு வாணிபக்கிடங்கு மேலாளர் சுந்தர் அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தார் சுந்தரராஜன் தமிழ்நாடு வாணிபக்கிடங்கு மேலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கலால் அலுவலர் பணியிடமாற்றம்
மேலும், சென்னை எல்லை சாலை திட்ட நிலம் எடுப்பு தாசில்தார் ராஜம்மாள், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தாராகவும், காஞ்சீபுரம் மாவட்ட பேரிடர் மேலான்மை தாசில்தார் தாண்டவமூர்த்தி, உத்திரமேரூர் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், காஞ்சீபுரம் கோட்ட கலால் அலுவலர் சுரேஷ், சென்னை - பெங்களூரு விரைவு சாலை அலகு 1 தாசில்தாராகவும், காஞ்சீபுரம் குடிமைப்பொருள் தாசில்தார் வாசுதேவன், காஞ்சீபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காஞ்சீபுரம் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேன்மொழி, காஞ்சீபுரம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 16 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.