குமரி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் அரவிந்த் உத்தரவு


குமரி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் அரவிந்த் உத்தரவு
x

குமரி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

உசூர் மேலாளர்

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உசூர் மேலாளராக (பொது) பணியாற்றி வந்த வெ.கண்ணன் கல்குளம் தாலுகா தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கல்குளம் தாசில்தாராக பணியாற்றி வந்த வினோத், நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த முருகன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த குமாரவேல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு கேபிள் டி.வி.யின் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை

அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தாராக பணியாற்றிய ஜூலியன் ஹீவர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக உசூர் மேலாளராகவும் (பொது), நாகர்கோவில் நகர நிலவரித் திட்டம் அலகு-2 தனி தாசில்தார் பத்மகுமார் விளவங்கோடு தாலுகா தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

விளவங்கோடு தாலுகா தாசில்தார் பாபு ரமேஷ் அகஸ்தீஸ்வரம் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், அகஸ்தீஸ்வரம் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சுரேஷ்குமார் நாகர்கோவில் பறக்கும் படை தனி தாசில்தாராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவட்டார் தாசில்தார்

நாகர்கோவில் பறக்கும் படை தனி தாசில்தார் அப்துல்லா மன்னான் பத்மநாபபுரம் கோட்ட ஆய அதிகாரியாகவும், பத்மநாபபுரம் கோட்ட ஆய அதிகாரியாக பணியாற்றி வந்த முத்துலெட்சுமி, நாகர்கோவில் நகர நிலவரித் திட்டம் அலகு-2 தனி தாசில்தாராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தோவாளை தாலுகா தாசில்தார் தாஸ் திருவட்டார் தாலுகா தாசில்தாராகவும், திருவட்டார் தாலுகா தாசில்தார் தினேஷ் சந்திரன் விளவங்கோடு தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வட்ட வழங்கல் அதிகாரி

விளவங்கோடு தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் அனில்குமார், அகஸ்தீஸ்வரம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியாகவும், அகஸ்தீஸ்வரம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதா நாகர்கோவில் ரெயில்வே நிலமெடுப்பு அலகு-2 தனி தாசில்தாராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் ரெயில்வே நிலமெடுப்பு அலகு-2 தனி தாசில்தார் வினைதீர்த்தான் தோவாளை தாலுகா தாசில்தாராகவும், கிள்ளியூர் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசிலதார் ராஜசேகர் விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரியாகவும், விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் கிள்ளியூர் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் அரவிந்த் பிறப்பித்துள்ளார்.


Next Story