19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
நெல்லை சரகத்தில் 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய மகேஷ்வரி, சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் திருவட்டாரில் பணியாற்றிய ஷேக் அப்துல்காதர் சேரன்மாதேவிக்கும், கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சுசீந்திரத்திற்கும், அங்கு பணியாற்றிய சாய்லட்சுமி திருவட்டாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை மாநகர உளவுப்பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று குமரி மாவட்டம் கருங்கல்லில் பதவியேற்கிறார்.
தென்காசி சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜன் பதவி உயர்வு பெற்று பாளையங்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டராகவும், மதுரையில் பணியாற்றிய பிரேம் ஆனந்த், தூத்துக்குடி வடபாகத்திற்கும், கொல்லன்கோடு ரமா, நெல்லை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், அங்கு பணியாற்றிய ராஜ், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு செந்தில்குமாரும், அங்கு பணியாற்றிய ஜெயசீலன் நாசரேத் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.
நெல்லை மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சங்கரன்கோவில் டவுனுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் குற்றப்பிரிவு வீரசோலை, விளாத்திகுளத்திற்கும், அங்கு பணியாற்றிய இளவரசு மார்த்தாண்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். காத்திருப்பு பட்டியலில் இருந்த ராஜா கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த சாந்தி, கோவில்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய செல்லமுத்து காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பிறப்பித்துள்ளார்.