4 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம்
4 துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்ட கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், `டாஸ்மாக்' மாவட்ட மேலாளர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள, 27 துணை கலெக்டர்கள், நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி திருச்சி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சிறப்பு பறக்கும் படை துணை கலெக்டராக பணியாற்றிய ஷாஜகான் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக (கிழக்கு) இட மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய முருகேசன் (நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மேலாண்மை அலகு) விழுப்புரம் உதவி ஆணையராகவும் (கலால்). திருச்சி மாவட்ட முன்னாள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றிய சரவணன் சென்னை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் துணை கலெக்டராகவும், திருச்சி ஸ்ரீரங்கம் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி உதவி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான அரசாணையை, அரசு கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.