மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய மண்டலத்தில் 5 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஐ.ஜி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கும், மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்கும், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி போலீஸ் நிலையத்துக்கும், அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் அரியலூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆன்மிக தலமான சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் சோதனை நடத்தி விபசார புரோக்கர்களை கைது செய்தனர். இத்தனை நாட்களாக விபசாரத்தை கண்டுகொள்ளாததால் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோல் புகார்களை சரிவர விசாரிக்காத ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆயுதப்படைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவரும் பெரம்பலூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.