6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஜூன்.3-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

அனக்காவூர் வட்டாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ஏ.பி.வெங்கடேசன் (கிராம ஊராட்சி), தெள்ளாருக்கும் (வருவாய் ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த ஆர்.குப்புசாமி அனக்காவூருக்கும் (கிராம ஊராட்சி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணியாற்றி வந்த எஸ்.அருணாச்சலம் (நிர்வாகம்) திருவண்ணாமலை வட்டாரத்துக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த கு.மரியதேவ்ஆனந்த் திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி முகமைக்கும் (மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம்),

அங்கு பணியாற்றி வந்த அண்ணாதுரை கீழ்பென்னாத்தூருக்கும் (கிராம ஊராட்சி), அங்கு பணியாற்றி வந்த பாண்டியன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் (நிர்வாகம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை கலெக்டர் முருகேஷ் பிறப்பித்துள்ளார்.


Next Story