6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 6 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அம்பாத்துரைக்கும், திண்டுக்கல் கட்டுப்பாட்டு அறை ரமேஷ்ராஜா குஜிலியம்பாறைக்கும், குஜிலியம்பாறை சரத்குமார் பழனி தாலுகாவுக்கும், திண்டுக்கல் வடக்கு முப்பிடாரி திண்டுக்கல் மேற்குக்கும், மகேஷ் நத்தத்துக்கும், பழனி தாலுகா முரளி பழனி அடிவாரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் திண்டுக்கல் வடக்குக்கும் மாற்றப்பட்டு உள்ளார்.


Next Story