போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணி இடமாற்றம்


போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணி இடமாற்றம்
x

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 7 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி மாநகர காவல்துறையில் 7 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் பி.ரமேஷ் காந்திமார்க்கெட் சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையத்துக்கும், இன்ஸ்பெக்டர் ஏ.வீரசோலை கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும், எம்.செல்வகுமார் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், டி.கவிதா, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.அருள்ஜோதி, காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஆனந்தி வேதவல்லி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கும், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் எஸ்.வசுமதி, செசன்சு கோர்ட்டு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி பிறப்பித்துள்ளார்.


Next Story