கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைப்பு
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை கலெக்டா் ஸ்ரீதர் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 807 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தச்சூர் கைகாட்டி அருகில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும்படி சென்னை தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா எனவும், சரியாக உள்ளதா என பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கூடிய வாகனத்தில் ஏற்றி, பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது தேர்தல் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story