சேலம் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சேலம் சரகத்தில் 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 9 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி ராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கும், பாலசுந்தரம், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கும், டி.தீபா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கே.ஏ.சரவணன் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பணிபுரிந்து வரும் இன்ஸ்பெக்டர் நவாஷ், சேலம் மாவட்டம் காரிப்பட்டிக்கும், ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், திருச்செங்கோடு டவுனுக்கும், திருசெங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி, நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்திற்கும், அங்கு பணியாற்றி வந்த குமரவேல்பாண்டியன், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொங்கணாபுரத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் விஜயசாரதி, தர்மபுரி மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி பிறப்பித்துள்ளார்.