விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி-க்கு மாற்றம் - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு


விஷச்சாராய வழக்குகள் அனைத்தும்  சிபிசிஐடி-க்கு மாற்றம் -  டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
x

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து வழக்குகளை சிபிசிஐடி-க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் இதுவரை விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேரும், செங்கல்பட்டில் 8 பெரும் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.இது தொடர்பாக விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து வழக்குகளை மாற்றி டி.ஜி.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story