சுகாதார அலுவலர்கள் இடமாற்றம்


சுகாதார அலுவலர்கள் இடமாற்றம்
x

நெல்லை மாநகராட்சியில் சுகாதார அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மண்டல சுகாதார அலுவலர் அரசகுமார் மேலப்பாளையம் மண்டலத்திற்கும், மேலப்பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது தச்சநல்லூர் மண்டலத்திற்கும், நெல்லை மண்டல சுகாதார அலுவலர் முருகேசன், பாளையங்கோட்டை மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் இளங்கோ நெல்லை மண்டலத்திற்கும், தச்சநல்லூர் மண்டல சுகாதார ஆய்வாளர் பெருமாள் பாளையங்கோட்டை மண்டலத்திற்கும், பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன் தச்சநல்லூர் மண்டலத்திற்கும், பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர் வி.முருகன் தச்சநல்லூர் மண்டலத்திற்கும், மேலப்பாளையம் மண்டல சுகாதார ஆய்வாளர் அந்தோணி பாளையங்கோட்டை மண்டலத்திற்கும், பாளையங்கோட்டை மண்டல சுகாதார ஆய்வாளர் என்.முருகன் மேலப்பாளையம் மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

1 More update

Next Story