கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா உத்தரவிட்டார்.
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா உத்தரவிட்டார்.
பணியிட மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் பணியாற்றும் தாசில்தார்கள் மற்றும் அதன் நிலையில் உள்ள வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் அம்ரித் கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பணியிடங்களில் தாசில்தார்கள், நேர்முக உதவியாளர்கள் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு கலந்தாய்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து ஆர்.டி.ஓ.முகமது குதரதுல்லா உத்தரவிட்டார்.
கிராம நிர்வாக அலுவலர்கள்
அந்த உத்தரவில் கூறியுள்ளதாவது:- கூடலூர் தாலுகாவில் கூடலூர்- 1 நந்தகோபால், கூடலூர்- 2 ராஜேஷ் குமார், பாடந்தொரை - 2 பார்வதி, ஓவேலி - 2 சாம் சுந்தரி ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேவாலா - 1 ஷோபா, தேவாலா - 2 சாம் சுந்தரி, செருமுள்ளி - 1 முகமது ஜாபர் ஷெரிப், ஸ்ரீ மதுரை ரஞ்சித் குமார், முதுமலை மோகன்ராஜ், நெலாக்கோட்டை பெண்ணை நாசர் அலியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பந்தலூர் தாலுகா பகுதியில் நெல்லியாளம் - 1 அசோக் குமார், நெல்லியாளம் - 2 மாரிமுத்து, சேரங்கோடு - 1 கர்ணன், சேரங்கோடு - 2 செந்தில்குமார் ஆகியோர் புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன நாடு - 1 ஷீஜா, எருமாடு - 2 யுவராஜ் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.