கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி,
சாத்தூர் தாலுகாவில் உள்ள முள்ளிசெவல் கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் கவிதா, ராஜபாளையம் தாலுகாவில் உள்ள கடம்பன்குளம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடம்பன்குளம் கிராமத்தில் பணியாற்றி வந்த சுந்தரராஜ், சாத்தூர் தாலுகாவில் உள்ள முள்ளிசெவல் கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அச்சந்தவிழ்த்தான் கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி, வாழைக்குளம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாழைக்குளம் கிராமத்தில் பணியாற்றிய ராஜேந்திரன், அச்சந்தவிழ்த்தான் கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கான்சாபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய சங்கரேஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள டி.மானகசேரி கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவகாசி தாலுகா வேண்டுராயபுரம் கிராமத்தில் பணியாற்றி வந்த பாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள விழுப்பனூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வத்திராயிருப்பு வ.புதுப்பட்டி கிராமத்தில் பணியாற்றி வந்த மாரிமுத்து, எஸ்.கொடிக்குளம் கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் பணியாற்றி வந்த வைரமுத்து, வ.புதுப்பட்டி கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கண்ட தகவல் சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.